மெர்டேக்கா தலைமுறையைக் கௌரவித்தல்

1950க்கும் 1959க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த மெர்டேக்கா தலைமுறையினர், கொந்தளிப்புமிக்க காலகட்டமான1950கள் மற்றும் 1960களின் தொடக்கத்தில் வளர்ந்தவர்கள். குழப்பமான காலத்தில் ஊழியரணியை வழிநடத்தி, உறுதியான ஓர் அடித்தளத்தை அவர்கள் அமைத்தனர். முதன்முதலில் தேசிய சேவையாற்றியவர்களில் அத்தலைமுறையைச் சேர்ந்த ஆண்களும் அடங்குவர்; பெண்களில் சிலர், தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றப் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்டனர்.

முன்னோடித் தலைமுறையைப் போலவே, இவர்களும் போராட்டம், சிரமம், தியாகம், ஆகியவை நிறைந்த காலத்தில் சிங்கப்பூருக்குப் பெரிதும் பங்களித்துள்ளனர்.

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்துக்குத் தகுதிபெற, நீங்கள்:
• 1 ஜனவரி 1950க்கும் 31 டிசம்பர் 1959க்கும் இடையில் பிறந்து;
• 31 டிசம்பர் 1996 அன்று அல்லது அதற்கு முன் சிங்கப்பூர்க் குடிமகனாகியிருக்க வேண்டும்.

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் பின்வரும் மூத்தோருக்கும் வழங்கப்படுகிறது:
• 31 டிசம்பர் 1949 அன்று அல்லது அதற்கு முன் பிறந்து;
• 31 டிசம்பர் 1996 அன்று அல்லது அதற்கு முன் சிங்கப்பூர்க் குடிமகனாகியிருந்து;
• முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தைப் பெறாதவர்கள்

நீங்கள் தகுதிபெற்றால், உங்களுக்கு ஏப்ரல் 2019க்குள் தெரிவிக்கப்படும். நீங்கள் உங்களுடைய மெர்டேக்கா தலைமுறை அட்டையை ஜூன் 2019 முதல் பெறுவீர்கள்.

ஓர் ஆசிரியரின் கல்வி

சமையற்கலை வல்லுநரின் மரபு

ஓர் உயிர்க்காப்பாளரின் வேட்கை

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம்

மெர்டேக்கா தலைமுறையினரின் பங்களிப்புகளுக்காக அவர்களைக் கௌரவித்து நன்றி தெரிவிக்க, அரசாங்கம் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் சிங்கப்பூரை இன்று இருக்கும் தேசமாக வடிவமைத்துள்ளனர்.

இந்த மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் சுமார் 500,000 சிங்கப்பூரர்கள் பயனடைவர். அது மெர்டேக்கா தலைமுறையினர் துடிப்பாக, அர்த்தமுள்ள வகையில் முதுமையடைய ஆதரவளிக்கும்.

Placeholdere image
நன்மை #1

மூத்தோருக்கான பேஷன் அட்டைகளில் நிரப்புத்தொகை

 • துடிப்புடன் மூப்படைதல் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் மேலும் பலவற்றுக்குப் பயன்படுத்துவதற்கான ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் $100 மதிப்புள்ள மூத்தோருக்கான பேஷன் அட்டை நிரப்புத்தொகை
 • இந்த நிறப்புத்தொகையை, 1 ஜூலை 2019 முதல், குறிப்பிட்ட சமூக நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். நிறப்புத்தொகையை பெற கூடிய இடங்களின் பட்டியல் இங்கு காணப்படும்
Placeholdere image
நன்மை #2

மெடிசேவ் பண நிரப்புதல்கள்

 • 2019 முதல் 2023 வரை, ஒவ்வோர் ஆண்டும் $200 மெடிசேவ் பண நிரப்புதல்கள்
Placeholdere image
நன்மை #3

வெளிநோயாளி பராமரிப்பு நிதி உதவிகள்

 • வெளிநோயாளி மருத்துவ மற்றும் பல்மருத்துவ நிதி உதவிகளுக்காக 3 சுகாதாரப் பராமரிப்பு மையங்கள் - சாஸ் (CHAS) பொது (GP), பலதுறை மற்றும் பொது நிபுணத்துவ புறநோயாளி மருந்தகங்கள் (SOCs).
Placeholdere image
நன்மை #4

கேர்ஷீல்டு லைஃப் பங்கேற்பு ஊக்கத்தொகைகள்

 • கேர்ஷீல்டு லைஃப்-இல் இணைவதற்கு $4,000 பங்கேற்பு ஊக்கத்தொகைகள்
Placeholdere image
நன்மை #5

மெடிஷீல்டு லைஃப் காப்பீட்டுச் சந்தாக்களுக்குக் கூடுதல் நிதியுதவிகள்

 • உங்கள் மெடிஷீல்டு லைஃப் காப்பீட்டுச் சந்தாக்களுக்கு 5% கூடுதல் நிதியுதவி. இது நீங்கள் 75 வயதை அடைந்ததன் பின்னர் 10% வரை அதிகரிக்கும்

மெர்டேக்கா தலைமுறை வரவேற்புத் தொகுப்பு

தகுதிபெறும் சிங்கப்பூரர் ஜூன் 2019 முதல் அஞ்சல்வழி மெர்டேக்கா தலைமுறை வரவேற்புத் தொகுப்பைப் பெறுவர். அதனில் அடங்குபவை:

 1. பிரதமர் லீயிடமிருந்து நன்றிக் குறிப்பு
 2. மெர்டேக்கா தலைமுறை அட்டை
 3. அருகாமையில் உள்ள சாஸ் (CHAS) மருந்தகங்களின் பட்டியல்
 4. அனுகூலங்கள் குறித்த சிறுபுத்தகம்
 5. மூத்தோருக்கான பேஷன் அட்டை நிரப்புத்தொகைகள் குறித்த தகவல்கள்

கேள்வி ஏதும் உள்ளதா?

கீழ்க்காணும் படிவத்தில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாம் கூடியவிரைவில் உங்களுக்குப் பதில் அளிப்போம்.