முகப்பு / மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தின் பலன்கள்

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தின் பலன்கள்

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம் என்பது 1 ஜனவரி 1950 முதல் 31 டிசம்பர் 1959 வரை பிறந்த மற்றும் 31 டிசம்பர் 1996 அன்று அல்லது அதற்கு முன்னர் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்ற சிங்கப்பூரர்களுக்கான ஒரு திட்டமாகும். இந்தத் தொகுப்புத்திட்டம் முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தைப் பெறாதவர், ஆனால் 31 டிசம்பர் 1949 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்த மற்றும் 31 டிசம்பர் 1996 அன்று அல்லது அதற்கு முன்னர் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்ற மூத்தோர்களுக்கும் கூட வழங்கப்படுகிறது.


நன்மை #1

மூத்தோருக்கான பேஷன் அட்டைகளில் நிரப்புத்தொகை

  • துடிப்புடன் மூப்படைதல் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் மேலும் பலவற்றுக்குப் பயன்படுத்துவதற்கான ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் $100 மதிப்புள்ள மூத்தோருக்கான பேஷன் அட்டை நிரப்புத்தொகை
  • இந்த நிறப்புத்தொகையை, 1 ஜூலை 2019 முதல், குறிப்பிட்ட சமூக நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். நிறப்புத்தொகையை பெற கூடிய இடங்களின் பட்டியல் இங்கு காணப்படும்

ஜூலை 2019 முதல், நீங்கள் ஒருமுறையே வழங்கப்படும் $100 நிரப்புதொகையை உங்கள் மூத்தோருக்கான பேஷன் அட்டையில் பெற்றுக்கொள்ளலாம். துடிப்புடன் மூப்படைதல் குறித்த மேலும் பல நடவடிக்கைகளுக்கு இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களுக்கு வழங்கப்படும் $100ஐ நீங்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

நிரப்புதொகையை எவ்வாறு பெறுவது? 

இந்த நிறப்புத்தொகையை, 1 ஜூலை 2019 முதல், குறிப்பிட்ட சமூக நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். நிறப்புத்தொகையை பெற கூடிய இடங்களின் பட்டியல் இங்கு காணப்படும். குறிப்பிட்ட மெர்டேக்கா தலைமுறை சாலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கூட இந்த நிறப்புத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். 

நிரப்புதொகையைப் பெறுவதற்குரிய இடங்கள் குறித்த விவரங்களுக்கு, PAssioncard.sg என்ற இணையத்தளத்தை நாடவும். அல்லது 1800-2255-663 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

நன்மை #2

மெடிசேவ் பண நிரப்புதல்கள்

  • 2019 முதல் 2023 வரை, ஒவ்வோர் ஆண்டும் $200 மெடிசேவ் பண நிரப்புதல்கள்

உங்கள் மெடிசேவ் தொகையை நீங்கள் எதற்குப் பயன்படுத்தலாம்?

நன்மை #3

வெளிநோயாளி பராமரிப்பு நிதி உதவிகள்

  • வெளிநோயாளி மருத்துவ மற்றும் பல்மருத்துவ நிதி உதவிகளுக்காக 3 சுகாதாரப் பராமரிப்பு மையங்கள் - சாஸ் (CHAS) பொது (GP), பலதுறை மற்றும் பொது நிபுணத்துவ புறநோயாளி மருந்தகங்கள் (SOCs).

நவம்பர் 2019 முதல், பலதுறை மருந்தகங்கள்,பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்கள், சாஸ் (சமூக சுகாதார உதவித் திட்டம்) மருந்தகங்கள் முதலியவற்றில் நீங்கள் கூடுதல் நிதியுதவிகளைப் பெறுவீர்கள்.

பலதுறை மருந்தகங்களிலும் பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும்*
சலுகை விலை சேவைகளுக்கும் மருந்துகளுக்குமான மீதமுள்ள 
கட்டணத்திலிருந்து கூடுதலாக 25% கழிவு
சாஸ் (CHAS) மருந்தகங்களில்
- நீங்கள் சாஸ் (CHAS) மருந்தகங்களுக்குச் செல்லும்போது, நிதியுதவிகளைப் பெறுவதற்கு உங்கள் மெர்டேக்கா தலைமுறை அட்டையையும் அடையாள அட்டையையும் உடன் எடுத்துச்செல்லுங்கள்.
சாதாரண நோய்கள்
(எ.கா. சளி, இருமல்)
ஒரு முறை மருத்துவரைக் காண 
      $23.50 வரை நிதியுதவி
சிக்கலற்ற நாட்பட்ட நோய் 1
ஒரு முறை மருத்துவரைக் காண
$85 வரை நிதியுதவி
ஆண்டுக்கு அதிகபட்சமாக $340
சிக்கலான நாட்பட்ட நோய்கள் 2
ஒரு முறை மருத்துவரைக் காண
$130 வரை நிதியுதவி
ஆண்டுக்கு அதிகபட்சமாக $520
குறிப்பிட்ட பல் மருத்துவ சேவைகள்
சிகிச்சை முறையைப் பொறுத்து
ஒரு சிகிச்சை முறைக்கு $16
முதல் $261.50 வரை நிதியுதவி
வாழ்வில் நலம்பெற பரிசோதனை 
செய்திடுக
திட்டத்தின் மூலம் 
பரிந்துரைக்கப்பட்ட உடல்நலப் பரிசோதனை
மெர்டேக்கா தலைமுறைக்கு
நிலையான கட்டணமாக $2

* பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களுக்கான நிதியுதவிகளைப் பெற, நீங்கள் முதலில் ஒரு சாஸ் (CHAS) மருந்தகம் அல்லது பலதுறை மருந்தகத்தில் பரிசோதிக்கப்பட்டு, பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகத்திற்குப் பரிந்துரைக்கப்படவேண்டும். தேவைப்பட்டால், மருத்துவர் உங்களை நிதியுதவிக்குத் தகுதிபெற்ற (subsidised) நோயாளியாக, பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகத்திற்குப் பரிந்துரைப்பார்.

1ஒரே ஒரு நாட்பட்ட நோய்க்காக மருத்துவரைக் காண்பது (எ.கா. உயர் இரத்த அழுத்தம்)
2ஒன்றுக்கு மேற்பட்ட நாட்பட்ட நோய்களுக்காகவோ, சிக்கலான நாட்பட்ட நோய்களுக்காகவோ மருத்துவரைக் காண்பது

நன்மை #4

கேர்ஷீல்டு லைஃப் பங்கேற்பு ஊக்கத்தொகைகள்

  • கேர்ஷீல்டு லைஃப்-இல் இணைவதற்கு $4,000 பங்கேற்பு ஊக்கத்தொகைகள்

கேர்ஷீல்டு லைஃப், கடும் உடல் இயலாமையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நீண்டகால சுகாதாரப் பராமரிப்புத் திட்டம். எல்டர்ஷீல்டு திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் அது. 1979 அல்லது அதற்கு முன் பிறந்தோருக்கு கேர்ஷீல்டு லைஃப் திட்டம் 2021இல் தொடங்கப்படும்.

உத்தேச சந்தாக் கட்டணங்களைத் தெரிந்துகொள்ள, அன்புகூர்ந்து கேர்ஷீல்டு லைஃப் சந்தாக் கட்டணக் கணிப்பானைக் காணவும்

நன்மை #5

மெடிஷீல்டு லைஃப் காப்பீட்டுச் சந்தாக்களுக்குக் கூடுதல் நிதியுதவிகள்

  • உங்கள் மெடிஷீல்டு லைஃப் காப்பீட்டுச் சந்தாக்களுக்கு 5% கூடுதல் நிதியுதவி. இது நீங்கள் 75 வயதை அடைந்ததன் பின்னர் 10% வரை அதிகரிக்கும்

மெடிஷீல்டு லைஃப், பெரும் மருத்துவமனைக் கட்டணங்களிலிருந்து சிங்கப்பூரர்களுக்கு வாழ்நாள் பாதுகாப்பு அளிக்கிறது.

மெர்டேக்கா தலைமுறை மூத்தோருக்கு 
மெடிஷீல்டு லைஃப் சந்தாக் கட்டண நிதியுதவி
அடுத்த
பிறந்தநாளில் 
உங்கள் வயது

(காப்புறுதிப்
புதுப்பிப்பின்போது)* 
தற்போதைய 
அரசாங்க 
நிதியுதவி#
மெர்டேக்கா 
தலைமுறை 
நிதியுதவி
மொத்த 
நிதியுதவிகள்
60 - 75 
வயது
$341.25 வரை
(உங்கள் ஆண்டுச் 
சந்தாவில் 35% வரை)
$31.50$48.75
(உங்கள் ஆண்டுச் 
சந்தாவில் 5% வரை)
$390
வரை
76 வயது 
அல்லது 
அதற்கு மேல்
$765 வரை
(உங்கள் ஆண்டுச் 
சந்தாவில் 50% வரை)
$113$153
(உங்கள் ஆண்டுச் 
சந்தாவில் 10% வரை)
$918
வரை
 

*உங்கள் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் 1 ஜூலை 2019க்கும் 31 அக்டோபர் 2019க்கும் இடையில் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தால், மெர்டேக்கா தலைமுறை சந்தாக் கட்டண நிதியுதவியை 31 டிசம்பர் 2019க்குள் திருப்பித் தரப்படும் தொகையாக நீங்கள் பெறுவீர்கள்.
#தற்போதைய நிதியுதவிகள் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கானவை. மேல் விவரங்களுக்கு, அன்புகூர்ந்து www.moh.gov.sg/medishield-life/medishield-life-premiums-and-subsidies இணையத்தளத்துக்குச் செல்லுங்கள்.