முகப்பு / தகவல் வளங்கள்

தகவல் வளங்கள்


$100 பேஷன் சில்வர் அட்டை நிரப்புதொகை நீங்கள் மேலும் பல நடவடிக்கைகளில் கலந்துகொள்ள உதவுகிறது

துடிப்புடன் மூப்படைய மேலும் அதிகமான வாய்ப்புகளுக்கு, 1 ஜூலை 2019 முதல், உங்கள் பேஷன் சில்வர் அட்டையில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் $100 நிரப்புதொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் மேலும் புன்னகைக்க, $200 மெடிசேவ் நிரப்புதொகைகள்

2019 முதல் 2023 வரை, ஒவ்வோர் ஆண்டும், $200 மெடிசேவ் நிரப்புதொகைகள்

நீங்கள் நலமாக இருந்திட, கூடுதல் வெளிநோயாளிப் பராமரிப்பு நிதியுதவிகளுக்கு 3 சுகாதாரப் பராமரிப்பு மையங்கள்

நவம்பர் 2019 முதல், சாஸ் (CHAS) மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள், பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்கள் ஆகியவற்றில் கூடுதல் நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேருவதற்கு $4,000 ஊக்கத்தொகை நீங்கள் விரும்புபவற்றை அதிகமாகச் செய்ய வாய்ப்பளிக்கும்

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட $2,500க்கு மேல் $1,500 பங்கேற்றல் ஊக்குவிப்புத் தொகையை மெர்டேக்கா தலைமுறையினர் பெறுவர்.

5% கூடுதல் மெடிஷீல்டு லைஃப் சந்தா நிதியுதவிகள் நீங்கள் மகிழ்ச்சியடைய அதிக காரணத்தைக் கொடுக்கின்றன

கூடுதல் 5% மெடிஷீல்டு லைஃப் ஆண்டுச் சந்தா நிதியுதவிகள், உங்களது 75ஆவது பிறந்தநாளுக்குப் பின்னர் 10%ஆக அதிகரிக்கும்.

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தின் 5 நன்மைகள்

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தின் 5 நன்மைகளின் சுருக்கம்

$100 மூத்தோருக்கான பேஷன் அட்டை நிரப்புதொகை: அதிகமாகக் கற்றுக்கொள்ளுங்கள், நடமாடுங்கள், மகிழ்ச்சி அடையுங்கள்

மூத்தோருக்கான பேஷன் அட்டை நிரப்புத்தொகையை ஜூலை மாதம் முதல் பெற்றுக்கொண்டு, தொடர்ந்து துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் இருங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக நிலையங்கள், பெருவிரைவுப் போக்குவரத்து ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மெர்டேக்கா தலைமுறை சாலைக் காட்சிகளிலும் நிகழ்ச்சிகளிலும் அந்த $100 நிரப்புத்தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Mer.De.Ka அனுபவங்கள்

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தில் துடிப்புடனும், ஆரோக்கியத்துடனும், இணைப்புடனும் இருக்கும் மெர்விஸ், தேவி, கசிம் மற்றும் ஓல்டு மாஸ்டர் கியூ (லௌ ஃபு சு) ஆகியோருடன் இணைந்திருங்கள்.

$200 வருடாந்திர மெடிசேவ் நிரப்புத் தொகைகள்: ஆரோக்கியமாகவும், பாதுகாப்புடனும் இருங்கள்

ஜூலை 2019 முதல் 2023 வரை, ஒவ்வோர் ஆண்டும், $200 மெடிசேவ் நிரப்புத் தொகையைப் பெறுங்கள். அது ஐந்து ஆண்டுகளில் $1,000 வரை பெற்றுத்தரும்!

கூடுதல் வெளிநோயாளிப் பராமரிப்பு நிதியுதவிகளுக்காக 3 சுகாதாரப் பராமரிப்பு மையங்கள்: வெளிநோயாளிப் பராமரிப்பு, முன்பைவிட அதிகக் கட்டுப்படியாக உள்ளது!

நவம்பர் 2019 முதல், 3 சுகாதாரப் பராமரிப்பு மையங்கள் மூலம் வெளிநோயாளி மருத்துவ, பல்மருத்துவப் பராமரிப்புக்கென கூடுதல் நிதியுதவிகளைப் பெறுங்கள் - சாஸ் பொது மருந்தகங்களும் பல் மருந்தகங்களும், பலதுறை மருந்தகங்கள், பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்கள்.

கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேர $4,000 ஊக்குவிப்புத் தொகை: கேர்ஷீல்டு லைஃப் திட்டத்துடன் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்

நீங்கள் கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேரும்போது, தற்போது கிடைக்கும் $2,500 தவிர்த்து, கூடுதலாக $1,500-ஐ ஊக்குவிப்புத் தொகையாகப் பெறுங்கள். இது, 10 ஆண்டுக்கும் மேலான உங்கள் வருடாந்திர சந்தாக்களை ஈடு செய்துவிடும்!

5% கூடுதலான மெடிஷீல்டு லைஃப் சந்தாக் கட்டண நிதியுதவிகள்: வாழ்க்கையின் நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்

மெடிஷீல்டு லைஃப் சந்தாக் கட்டணங்களுக்குக் கூடுதலாக 5% நிதியுதவிகளைப் பெறுங்கள். அதுமட்டுமா? உங்கள் 75வது பிறந்தநாளுக்குப் பிறகு, இது 10%-க்கு அதிகரிக்கும்!