முகப்பு / பாராட்டு விழா

மெர்டேக்கா தலைமுறையினருக்கான பாராட்டு விழா

கரையோரப் பூந்தோட்டங்களில் இன்று காலை நடைபெற்ற பாராட்டு விழாவில் மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த 200 -க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளைப் பிரதமர் திரு லீ சியன் லூங் அவர்கள் பாராட்டி கௌரவித்தார். அவர்களில் அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட தொண்டூழியர்கள், பொதுச் சேவை அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் சமூகத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள சிங்கப்பூரர்கள் உள்ளடங்குவர். அவர்களின் பெரும்பாலானோர் தங்கள் சமூகங்களுக்கும் தேசத்திற்கும் இன்றும் துடிப்புடன் சேவைபுரிந்து வருகின்றனர்.

“தேசத்தை வடிவமைத்த கரங்கள்” எனும் கருப்பொருளைக் கொண்ட காணொளி இந்த விழாவில் முதன்முறையாகக் காண்பிக்கப்பட்டது. நமது தேசம் உருவான ஆண்டுகள் முழுவதும் மெர்டேக்கா தலைமுறையினரின் உறுதி, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையைக் கரங்கள் சின்னத்தால் படம்பிடித்துக் காட்டி மனம் உருகச் செய்கிறது இக்காணொளி. சிங்கப்பூரர்கள் இக்காணொளியை இலவச தொலைக்காட்சி ஒளிவழிகள், குறிப்பிட்ட திரையரங்குகள், மற்றும் Gov.sg - இன் யூட்யூப் பக்கம் உள்ளிட்ட பல்வேறு மின்னிலக்கத் தளங்களிலும் காணலாம்.


கலாச்சார நிபுணர்கள், மற்றும் சக மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோர்களான டிக் லீ, ஜெசிந்தா அபிஷேகனாதன், மெல் ஃபெர்டினாண்ட்ஸ் மற்றும் ரஹிமா ரஹிம் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் விருந்தினர்களுக்கும் பெருவிருந்தாக அமைந்தன. அவர்கள் மெர்டேக்கா சாயாங் பாடலை அறிமுகப்படுத்தி, மிகவும் விரும்பப்படுகின்ற ரசா சாயாங்கின் தாளத்திற்குப் பாடினர். டிக் லீ அவர்களால் எழுதப்பட்ட பாடல் வரிகள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக மெர்டேக்கா தலைமுறையினர் ஆற்றிய அரும்பணிகளையும், அவர்களின் விடாமுயற்சி மற்றும் இன்றளவும் தொடரும் பற்றுதலையும் மிகவும் அருமையாக எடுத்துரைக்கின்றன.

சிங்கப்பூரின் கடந்தகாலத்தை நினைவுபடுத்திப் பார்ப்பதற்கு, தெருவோர உணவங்காடிக் கடைக்காரர்கள், பழைய வீவக குடியிருப்புப்பேட்டைகள் போன்ற சிங்கப்பூரின் பழைய காட்சிகளைச் சித்தரிக்கின்ற சுவரோவியங்கள் நிறுவப்பட்டன. சிங்கப்பூருக்கான அவர்களின் பங்களிப்புகளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், விருந்தினர்களுக்கு அவர்களின் கடந்த காலத்தை இவை நினைவுக்கு கொண்டுவந்தன.

LYRICS TO “MERDEKA SAYANG” SONG

Opening
Rasa Sayang hey! Rasa Sayang Sayang hey!
Hey, lihat nona jauh! Rasa sayang sayang, hey~ Hoi!

Verse 1
Once upon a time, I was only three
And our Singapore had no HDB
Home was in a kampong far from town
Or a small old house, a bit run down
But the country grew, and then so did we
‘Cause we saw the possibilities
We didn’t know we could come this far
At the time, we just say, “Just try, lah!”
Then, our TV was in black and white
Now the city lights, ah - a bit so bright!
Even though got hardships, we moved on
Before bus don’t even have aircon
Eh, to make this change, we have played our part.
Ya, we work so hard, but still young at heart 
Let’s hear it for us - like the lion’s roar
Going SINGA - SINGA - PORE!
Una, renda, moona

CHORUS
We’re the Merdekas
Proud to be right where we are
Merdeka Generation
Merdekas have come so far hoi!

Verse 2
When we were in school, life was oh, so slow
Then it changed, and we were Go! Go! Go!
Then came factories and technology
See the joke she sent me - so funny! 
With our silver hair, we still contribute
With this attitude, we can still dress cute
With our satay, prata, chye tow kuay 
We got much more fats to burn away
We stay healthy in our small red dot 
Medisave, Medishield, every Medi also got
Some more now we all got MGP
Giving subsidies, we lagi happy
Going hospital? Never mind, don’t scared
Medisave top-up so you can relak
Guess we couldn’t really ask for more 
Here in SINGA - SINGA - PORE!
Satu, dua, tiga

CHORUS
We’re the Merdekas
Proud to be right where we are
Merdeka Generation
Merdekas we’ve come so far hoi!

Yi, One, Er, Two, San, Three!

REPEAT CHORUS
We’re the Merdekas
Proud to be right where we are
Merdeka Generation
Merdekas we’ve come so far hoi!

Original music and Lyrics by Dick Lee
Performed by Dick Lee, Rahimah Rahim, Jacintha Abisheganaden & Mel Ferdinands
Re-arranged and produced by George Leong Recording Studio
Mixing by Horus Studio Pte Ltd
Coordinator: Bryan Tan
Licensed by: WMG (on behalf of WM Singapore)