முகப்பு / வரவேற்புத் தொகுப்பு

மெர்டேக்கா தலைமுறை வரவேற்புத் தொகுப்பு

உங்களின் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்திற்கான வரவேற்புத் தொகுப்பை  பெற்றுக்கொண்டீர்களா? நீங்கள் அதனுள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே அறிந்துகொள்ளுங்கள்.


தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் ஜூன் 2019ல் இருந்து தங்கள் அஞ்சல்பெட்டியில் மெர்டேக்கா தலைமுறையினருக்கான வரவேற்புத் தொகுப்பை பெறுவார்கள்.

  1. பிரதமர் லீ அவர்களிடமிருந்து நன்றி குறிப்பு
  2. மெர்டேக்கா தலைமுறை அட்டை
  3. அருகாமையில் உள்ள சாஸ் (CHAS) மருந்தங்களின் பட்டியல்
  4. பலன்கள் குறித்த தகவல் சிற்றேடு
  5. மூத்தோருக்கான பேஷன் அட்டை நிரப்புத்தொகைகள் குறித்த தகவல்கள்

பிரதமர் லீ அவர்களிடமிருந்து நன்றி குறிப்பு

மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோர்கள் சிங்கப்பூருக்காக ஆற்றிய அரும்பணிகள் மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டும் விதமாக, நமது பிரதமர் திரு லீ சியன் லூங் அவர்களுக்காக எழுதிய ஒரு குறிப்பு.

மெர்டேக்கா தலைமுறை அட்டை

மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோர்கள், தங்களின் சிறப்பு மெர்டேக்கா தலைமுறையினருக்கான பலன்களைப் பெறுவதற்காகச் சாஸ் (CHAS) தனியார் மருத்துவர்களை பார்க்க செல்லும்போதும் பல்மருத்துவ மறுந்தகங்களுக்கு செல்லும்போதும் தங்கள் மெர்டேக்கா தலைமுறை அட்டையைக் (தங்களின் அடையாள அட்டையுடன் சேர்த்து) கொண்டுவர வேண்டும்.

மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோர்கள் தங்களின் மெர்டேக்கா தலைமுறை அட்டையை நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்கள் அல்லது பலதுறை மருந்தகங்களுக்குக் கொண்டுவர மறந்துவிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களின் மெர்டேக்கா தலைமுறை தொடர்பான விவரங்கள் கணினி அமைப்புகளில் பிரதிபலிக்கப்படும்.

அருகாமையில் உள்ள 6 சாஸ்

மருந்தங்களின் பட்டியல் சுலபமான குறிப்புக்காக, மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த உறுப்பினர்களின் முகவரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஆறு சாஸ் மருந்தகங்களின் பட்டியல் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் நான்கு மருந்தகங்கள் தனியார் மருத்துவர்களின் மருந்தகங்களாகும், கீழே இருக்கும் இரண்டு மருந்தகங்கள் பல்மருத்துவ மருந்தகங்களாகும்.

பலன்கள் குறித்த தகவல் சிற்றேடு

மெர்டேக்கா தலைமுறையினருக்கான பலன்கள் குறித்து விவரிக்கின்ற ஒரு தகவல் சிற்றேடு நான்கு மொழிகளில் (ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ்) வழங்கப்பட்டுள்ளது. மெர்டேக்கா தலைமுறையினர் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தின் கீழ் எவற்றைப் பெறுவார்கள் என்பது குறித்த ஒரு விரிவான மற்றும் விவரமான வழிகாட்டுதலை அது வழங்குகிறது.

மூத்தோருக்கான பேஷன் அட்டை

நிரப்புத்தொகைகள் குறித்த தகவல்கள் உங்களின் வாழ்நாள் கற்றல் பயணத்தைத் தொடங்குவதற்கு நீங்கள் எந்தப் பயிற்சி வகுப்பில் சேரவேண்டும் என்று உங்களுக்குக் குழப்பமாக இருக்கிறதா? அல்லது, மற்ற மூத்தோர்கள் சுறுசுறுப்புடன் நீடித்திருக்க உதவுவதற்கு நீங்கள் எவ்வாறு தொண்டூழியம் புரியலாம்? உங்களுக்கான $100 மதிப்புள்ள மூத்தோருக்கான பேஷன் அட்டை நிரப்புத்தொகைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த சில யோசனைகளை இந்தத் துண்டுப் பிரசுரம் உங்களுக்கு வழங்கும்.